ஹெச்.ஐ.வி தொற்று என்பது உலக பொது சுகாதாரத்தின் முக்கிய பிரச்சனை. இன்று வரை இந்தக் கிருமி 35 மில்லியன் பேரை உயிரிழக்க செய்துள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.

கடந்த ஆண்டு மட்டும் ஹெச்.ஐ.வி தொடர்புடைய காரணங்களால் உலக அளவில் ஒரு மில்லியன் பேர் உயிரிழந்துள்ளனர்.

ஏறக்குறைய 37 மில்லியன் பேர் ஹெச்.ஐ.வி தொற்றோடு வாழ்ந்து வருகின்றனர். இதில் 70 சதவீதத்தினர் ஆப்பிரிக்காவில் வாழ்கின்றனர். 2017ம் ஆண்டு 1.8 மில்லியன் பேர் புதிதாக ஹெச்.ஐ.வி தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

1980களில் இந்த நோய் முதலில் பரவ தொடங்கியதில் இருந்து, ஹெச்.ஐ.வி எவ்வாறு பரவுகிறது? ஹெச்.ஐ.வியோடு வாழ்வது எப்படி? என்கிற கருத்துக்களில் எல்லாம் வதந்திகளும் கலந்திருந்தன.

உலக எயிட்ஸ் தினமான டிசம்பர் 1ம் தேதி இத்தகைய தவறான தகவல்களில் பொதுவானவற்றை வெளிப்படுத்துகிறோம்.

பல்வேறு விதமான விழிப்புணர்வு பரப்புரைகள் நடைபெற்றாலும், 2016ம் ஆண்டு பிரிட்டனிலுள்ள 20 சதவீத மக்கள், தொடுவதால்கூட ஹெச்.ஐ.வி பரவலாம் என்று நம்புகின்றனர்.

ஆனால், தொடுதல், கண்ணீர், வேர்வை, உமிழ்நீர், சிறுநீர் ஆகியவற்றால் ஹெச்.ஐ.வி பரவுவதில்லை.

ஹெச்.ஐ.வி கீழ்கண்டவற்றால் பரவாது:

  • ஒரே காற்றை சுவாசித்தல்
  • கட்டியணைத்தல், முத்தமிடுதல், கைக்குலுக்குதல்
  • சாப்பிடும் தட்டுகளை பகிர்ந்து கொள்ளுதல்
  • அருவிகளில் ஒன்றாக குளித்தல்
  • தனிப்பட்ட பொருட்களை பகிர்ந்து கொள்ளுதல்
  • ஜிம் உடற்பயிற்சி கருவிகளை பயன்படுத்துதல்
  • கழிவறை இருக்கை, கதவின் குமிழ் அல்லது கைப்பிடியை தொடுதல்

ஹெச்.ஐ.வி தொற்றியுள்ள நபர்களின் ரத்தம், விந்து, பெண் குறி திரவம் மற்றும் தாய் பால் போன்ற உடலிலுள்ள நீர்மங்களை பரிமாறிக்கொள்வதன் மூலம்தான் ஹெச்.ஐ.வி பிறருக்கு பரவுகிறது.

மாற்று மருத்துவம், உடலுறவு கொண்ட பின்னர் குளிப்பது அல்லது கன்னிப்பெண்ணோடு உடலுறவு கொள்வதால் ஹெச்.ஐ.வி தொற்றுவதை தடுத்துவிட முடியாது.

ஆப்பிரிக்காவின் சஹாரா பாலைவனத்திற்கு தெற்கிலுள்ள நாடுகளிலும், இந்தியா மற்றும் தாய்லாந்தின் பகுதிகளிலும் நிலவிய கன்னிப்பெண்ணோடு உறலுறவு கொண்டால் குணமாகிவிடலாம் என்கிற தவறான நம்பிக்கை மிகவும் ஆபத்தானது.

இதனால் பல இளம் பெண்களும், சிலவேளைகளில் குழந்தைகள் கூட பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டனர். இதன் மூலம் அவர்களும் ஹெச்.ஐ.வி தொற்றுகின்ற ஆபத்திற்கு உள்ளாகின்றனர்.

ரத்தத்தின் மூலம் ஹெச்.ஐ.வி வைரஸ் பரவுவதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவித்தாலும் ரத்தம் உறிஞ்சும் பூச்சிக்களால் ஹெச்.ஐ.வி தொற்றாது.

இரண்டு காரணங்கள்:

  1. பூச்சிகள் கடிக்கின்றபோது மனித அல்லது விலங்கின் உடலுக்குள் ரத்தத்தை செலுத்துவதில்லை.
  2. பூச்சிகளிடத்தில் ஹெச்.ஐ.வி வைரஸ் சிறிது நேரமே உயிருடன் இருக்கும்.

எனவே, ஏராளமான கொசுக்கள் அதிகம் இருக்கின்ற, ஹெச்.ஐ.வி தொற்று மிகவும் பரவலாகியிருக்கும் பகுதியில் நீங்கள் வாழ்ந்தாலும் ஹெச்.ஐ.வி தொற்றுவதற்கும், அந்த பகுதியின் சூழ்நிலைக்கும் எந்த தொடர்பும் இல்லை.

பாலுறவின்போது கருத்தடை சாதனங்கள் உடைந்தால், நழுவினால் அல்லது கசிந்தால் ஹெச்.ஐ.வி தொற்று பரவுவதை தடுப்பதில் தோல்வியடையலாம்.

எனவேதான் மக்கள் ரப்பர் உறைகளை அணிய செய்வதல்ல எயிட்ஸ் விழிப்புணர்வு அளிப்பவர்களின் வெற்றி. ஆனால், ஹெச்.ஐ.வி தொற்று இருப்பதை பரிசோதனை செய்து அறிந்து, இருப்பதாக தெரிந்து கொண்டால் உடனடியாக சிகிச்சை பெறச்செய்வதுதான் விழிப்புணர்வு அளிப்பவர்களின் வெற்றியாக அமையும்.

ஹெச்.ஐ.வி தொற்றிய தாய்மார் குழந்தைகளுக்கு அதைபரப்புவதை தவிர்க்க முடியாதுஇவ்வாறு நடைபெறும் என்று சொல்வதற்கில்லை. சிகிச்சை எடுத்து ஹெச்.ஐ.வி வைரஸை ஒடுக்கிவிட்டவர்களாக கருதப்படும் பெண்கள் இந்த வைரஸ் தொற்றை பரப்பாமல் குழந்தைகளை பெற்றெடுக்க முடியும்.