சுற்றுலாவாசிகளுக்கு மிகவும் பிடித்த இடமான பண்டாரவளை எல்ல மலைப்பகுதியில் நேற்று காலை முதல் காட்டுத்தீ பரவி வருகிறது.

இக்காட்டுத்தீயினால் சுமார் 20 ஏக்கருக்கு மேல் எரிந்து நாசமாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸார்,இராணுவத்தினர் மற்றும் பிரசேதவாசிகள் இணைந்து காட்டுத்தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்து வருகின்றனர்.

குறித்த காட்டுத்தீயானது எல்ல பகுதியில் உள்ள செங்குத்தான மலைப்பகுதியில் இகுவில் அடைய முடியாத இடத்தில் நிகழ்ந்துள்ளதால் தீயை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.