ஏழரைச் சனிக்கு நிச்சயமாக பரிகாரம் செய்யத்தான் வேண்டுமா? இந்த பரிகாரங்களால் என்ன மாற்றங்கள் ஏற்படும்? என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

ஏழரைச் சனிக்கு நிச்சயமாக பரிகாரம் செய்யத்தான் வேண்டுமா? இந்த பரிகாரங்களால் என்ன மாற்றங்கள் ஏற்படும்? கிரகங்களை ப்ரீதி செய்யும்போது நமக்கு எந்த விதத்தில் அவை நன்மையைச் செய்கின்றன? என்று அறிந்து கொள்ளலாம்.

ஏழரைச் சனிக்கு பெரும்பான்மையான ஜோதிடர்கள் சொல்லும் பரிகாரங்களில் சில : சனிக்கிழமை தோறும் விரதம் இருந்து தயிரும், எள்ளுப்பொடியும் கலந்த சாதத்தை காகத்திற்கு வைத்தபின், ஏழை எளியோருக்கு எள்ளுப்பொடி சாதம் தானம் செய்யலாம். சனி பகவானின் சந்நதியில் எள் முடிச்சிட்ட விளக்கேற்றி வைத்து கருங்குவளை மலர்களால் அர்ச்சனை செய்வதும் சனிக்கு ப்ரீதியான ஒன்று. சனிக்கிழமையில் ஆஞ்சநேயர், விநாயகர் வழிபாடும் ஏழரைச் சனியிடம் இருந்து நம்மைக் காப்பாற்றும்.

மேற்சொன்ன பரிகாரங்கள் செய்வதால் பெருத்த மாற்றங்களை எதிர்பார்க்க இயலாது. கிரகங்களை ப்ரீதி செய்வதால் கெடு பலன்களின் தாக்கம் குறையுமே அன்றி முழுமையாக அதிலிருந்து விடுபட இயலாது. இவ்வாறான பரிகாரங்கள் செய்வதால் கிரகங்களால் உண்டாகும் பலன்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் நமக்கு கிடைக்கிறது. மனம் பக்குவம் அடையும்போது கவலை ஏதும் தெரிவதில்லை.