நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பிரண்டன் மெக்குல்லம். சர்வதேச போட்டியில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்ற அவர் 20 ஓவர் போட்டிகளில் மட்டும் ஆடி வந்தார்.

இந்த நிலையில் அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அவர் சமீபத்தில் அறிவித்தார்.

இதற்கிடையே ஐ.பி.எல்.லில் விளையாடும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு மேக்குல்லம் உதவி பயிற்சியாளராக ஒப்புந்தம் ஆகியுள்ளார். அவர் ஏற்கனவே அந்த அணிக்காக ஐ.பி.எல். விளையாடி இருக்கிறார்.