ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்து செயல்பட போதுமான பணம் இல்லை என அதன் செயலாளர் அன்டோன்யு குட்டாரெஷ் கவலை தெரிவித்துள்ளார்.

ஐ.நா சபையில் அங்கம் வகிக்கும் நாடுகளுக்கு இது குறித்து கடிதம் எழுதப்பட்டுள்ளதாக அண்டானியோ குட்டரஸின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அந்தக் கடிதத்தில், “கடந்த பத்து ஆண்டுகளில் மோசமான பணத்தட்டுப்பாட்டை ஐ.நா சந்தித்துள்ளது. இந்த மாத இறுதிக்குள் பணம் கையிருப்பு செலவாகிவிடும். இதன் காரணமாக ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை ஏற்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

193 நாடுகளில் 129 நாடுகள் ஐ.நாவுக்கு தரவேண்டிய பணத்தைத் தந்துவிட்டது, எஞ்சிய நாடுகள் உடனடியாக தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஐ.நா தொடர்ந்து இயங்க வேண்டுமானால், இது மட்டுமே ஒரே வழி எனக் கூறப்பட்டுள்ளது.