பெற்றோர் ஆவதற்கு நீண்டகாலமாக முயற்சித்து வரும் பெர்லின் உயிரியல் பூங்காவிலுள்ள இரண்டு ஆண் பென்குவின்கள், கடந்த ஜூலை மாதம் முதல் கைவிடப்பட்ட முட்டை ஒன்றை பாதுகாத்து வரும் சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே பாலினத்தை சேர்ந்த இணையரான ஸ்கிப்பர் மற்றும் பிங் எனும் இரண்டு பென்குவின்கள் வெகு காலமாக தங்களுக்கென குழந்தை ஒன்றை பெறும் நோக்கத்தில் இருந்ததாக அந்த உயிரியல் பூங்காவின் செய்தித்தொடர்பாளர் மாக்ஸிமில்லியன் ஜாகெர் உள்ளூர் செய்தித்தாளியிடம் தெரிவித்துள்ளார்.

முட்டையிட்ட பென்குவின் அதை அனாதையாக விட்டுச்சென்றுவிட்ட நிலையில், இந்த ஒருபாலுறவு இணை அதன் “உண்மையான பெற்றோரை போன்று கவனிப்பதில் அக்கறையாக உள்ளன” என்றும் முட்டையின் வெப்பநிலையை காப்பதற்கு முயற்சித்து வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

பூங்கா பராமரிப்பாளர்கள் அளித்த ஒரு சிறிய ஊக்கத்திற்குப் பிறகு, பொறாமைமிக்க போட்டியாளர்களிடமிருந்து தங்கள் விலைமதிப்பற்ற முட்டையை பாதுகாக்க இந்த பென்குவின்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகின்றன.