தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று கூறுவார்கள். இது உண்மை தான். ஏனெனில் ஆப்பிளில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளது. ஆனால் ஆப்பிளை அதிகமாக சாப்பிட்டால், அதனால் ஒருசில பக்கவிளைவுகளையும் சந்திக்க நேரிடும்.

ஆப்பிள் எப்போதும் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் முக்கிய பழங்களுள் ஒன்று. ஏனெனில் இதில் உள்ள அத்தியாவசிய சத்துக்கள் பல்வேறு நோய்களின் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கும். மேலும் ஆப்பிள் வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழம். இது பல நோய்களை எதிர்த்துப் போராடி, உடலுக்கு வலிமையை அளிக்கக்கூடியது.

ஆப்பிளில் அத்தியாவசிய பாலிஃபீனால்கள் நிறைந்த பொருளாக கருதப்படுகிறது. இந்த உட்பொருட்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மையளிப்பவையாக கருதப்படுகிறது. மேலும் ஆப்பிளில் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும் மற்றும் இதய நோய்களை எதிர்த்துப் போராடும் உட்பொருட்கள் நிறைந்துள்ளன. மேலும் இது நார்ச்சத்தைக் கரைக்கக்கூடியப் பொருளைக் கொண்டுள்ளதால், உடலில் கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்கும். ஆனால் ஆப்பிளை ஒருவர் அதிகளவில் உட்கொண்டால், பக்க விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்பது தெரியுமா? பொதுவாக எந்த ஒரு உணவுப் பொருளை அதிகமாக சாப்பிட்டாலும், அதனால் பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதை எப்போதும் மறக்க வேண்டாம்.

ஆப்பிள் சாப்பிடுவதால் ஒருசில பக்க விளைவுகளையும் சந்திக்க நேரிடும் என்பது தெரியுமா? யாருக்கெல்லாம் ஆப்பிள் ரொம்ப பிடிக்குமோ, அவர்கள் கட்டாயம் ஆப்பிளால் ஏற்படும் தீங்கையும் அறிந்திருக்க வேண்டியது அவசியம்.

ஆப்பிளில் அதிகளவு அமிலம் உள்ளது. இந்த அமிலம் குளிர்பானங்களை விட நான்கு மடங்கு அதிகமாக பற்களில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. இந்த மாதிரியான சூழ்நிலையில், ஆப்பிளை அளவாகவே சாப்பிட வேண்டும். இதனால் பற்களில் பாதிப்பு ஏற்படுவது தடுக்கப்படும். எனவே ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிடுவதே போதுமானது.

ஆப்பிளில் கலோரிகள் ஏராளமாக நிறைந்துள்ளது. ஏனெனில் இதில் இயற்கை சர்க்கரை நிறைந்துள்ளது. 4-5 மிதமான அளவிலான ஆப்பிளில் சுமார் 3,500 கலோரிகள் நிறைந்திருக்கும். இந்த அளவு கலோரியானது உடல் பருமன், இதய நோய்கள் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஆரோக்கியமற்றது.

ஆப்பிளில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் ஏராளம். ஆப்பிளில் இருக்கும் கார்போஹைட்ரேட்டுகள் தான், உடலுக்கு ஆற்றலாக பயன்படுத்தப்படுகிறது. எப்போது ஒருவர் அதிகளவு ஆப்பிளை சாப்பிடுகிறாரோ, அவர்களது உடலில் கொழுப்புக்களின் அளவு அதிகமாக ஆரம்பிக்கும்.

ஆப்பிளை எப்போதும் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. ஏனெனில் இது இரத்த சர்க்கரை அளவை சட்டென்று அதிகரித்துவிடும். ஆப்பிளை சாப்பிடுவதற்கான சிறந்த நேரம் காலை வேளையாகும்.