சர்வதேச இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டிகளில் 100 விக்கட்டுக்களை வீழ்த்தி இலங்கை இருபதுக்கு இருபது அணித்தலைவர் லசித் மாலிங்க புதிய சாதனையை நிலை நாட்டியுள்ளார்.

அதேபோல், தொடர்ச்சியாக நான்கு பந்துகளில் நான்கு விக்கட்டுக்களை வீழ்த்தி மற்றுமொரு சாதனையையும் லசித் மாலிங்க படைத்துள்ளார்.

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் தற்போது இடம்பெற்றுவரும் மூன்றாவது இருபதுக்கு இருபது போட்டியில் தனது இரண்டாவது ஓவரில் அவர் இந்த சாதனைகளை நிலை நாட்டினார்.

அதன்படி, இருபதுக்கு இருபது போட்டிகளில் 100 விக்கட்டுக்களை பெற்ற முதல் வீரர் என்ற பெருமையை லசித் மாலிங்க பெற்றுள்ளார்.

மேலும், இருபதுக்கு இருபது போட்டியொன்றில் தொடர்ச்சியாக நான்கு விக்கட்டுக்களை வீழ்த்தியவர் என்ற சாதனையும் லசித் மாலிங்க தனதாக்கிக் கொண்டுள்ளார்.