ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல் உள்ளூர் போட்டி ஒன்றில் ஓடி வந்து ஒரு கையில் கேட்ச் பிடித்து அசத்தியுள்ளார். ஆஸ்திரேலியாவின் உள்ளூர் தொடரான ஜேஎல்டி ஒருநாள் கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாம் அரையிறுதி போட்டி நேற்று நடைபெற்றது. விக்டோரியா, வெஸ்டேர்ன் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. விக்டோரியா அணி சார்பாக மேக்ஸ்வெல் ஆடினார்.

இந்த போட்டியில் வெஸ்டேர்ன் ஆஸ்திரேலியா அணியை சேர்ந்த உஸ்மான் காதிர் பந்தை தூக்கி அடித்தார். பந்தை பிடிக்க ஓடிய மேக்ஸ்வெல், பந்தை பிடிக்க பெரிய இடைவெளி இருந்த போதிலும் ஒரு கையால் பந்தை கேட்ச் பிடித்தார்.

மிக முக்கியமான இந்த அரையிறுதிப் போட்டியில் மேக்ஸ்வெல் பீல்டிங்கில் முக்கிய பங்காற்றினார். இந்த அசாதாரண கேட்ச் பிடித்ததோடு, இந்த போட்டியில் ஒரு ரன் அவுட்டும் செய்தார். இந்த போட்டியில் மேக்ஸ்வெல் ஆடிய விக்டோரியா அணி 63 ரன்கள் வித்தியாத்தில் வெற்றி பெற்றது. இறுதிப் போட்டியில் ஆட உள்ளது.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் மேக்ஸ்வெல் இடம் பிடிக்கவில்லை. அவருக்கு அணியில் ஏன் இடம் இல்லை என முன்னாள் வீரர்கள் சிலர் கேள்வி எழுப்பினர்.