சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ள விஸ்வாசம் படம் இன்று ரிலீஸாகியுள்ளது. படத்தை பார்த்தவர்களுக்கு சிவா மீதிருந்த கோபம் எல்லாம் காணாமல் போய்விட்டது

காரணம் அஜித் ரசிகர்களுக்கு படம் அந்த அளவுக்கு பிடித்துள்ளது

விஸ்வாசம் படத்தை பார்த்த அஜித் நாம் சேர்ந்து பணியாற்றிய படங்களில் இது தான் சிறப்பாக உள்ளது என்று சிவாவிடம் தெரிவித்துள்ளார். அஜித் சொன்னது தான் உண்மை. படத்தை பார்த்தவர்களும் அதையே தான் ஃபீல் பண்ணுகிறார்கள்.

விஸ்வாசம் படத்தில் அஜித், நயன்தாரா இடையேயான கெமிஸ்ட்ரி சூப்பராக ஒர்க்அவுட் ஆகியுள்ளது. நயன்தாராவுக்கு மிகவும் பிடித்த நடிகர் அஜித் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தில் தந்தை, மகள் இடையேயான பாசம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.