தமிழ் திரையுலகில் கதை வசன கர்த்தவாகவும், நடிகராகவும் திகழ்ந்த கிரேசி மோகன் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.

தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக திகழ்ந்த நடிகர் கிரேசி மோகன் (66) மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் இன்று காலமானார். கதை வசன கர்த்தாவாகவும், நாடக ஆசிரியராகவும் திகழ்ந்தவர். மேடை நாடகங்களை இயக்கியுள்ளார். அடிப்படையில் பொறியாளராக திகழ்ந்த இவர், கமல் ஹாசன் மூலமாகவே திரைக்கு வந்துள்ளார்.

கமல் ஹாசனின் அபூர்வ சகோதரர்கள் படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். இதைத் தொடர்ந்து மைக்கேல் மதன காமராஜ், பஞ்ச தந்திரம், வசூல் ராஜா எம்பிபிஎஸ் ஆகிய திரைப்படங்களுக்கு கதை வசன கர்த்தாவாக பணியாற்றியுள்ளார். இந்த படங்கள் எல்லாமே கமல் ஹாசன் நடித்த படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எப்போதும், நகைச்சுவையாகவே வசனம் எழுதுவது இவரது சிறப்பம்சம். இவர், அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜ், ஆஹா, காதலா காதலா, பஞ்ச தந்திரம், வசூல்ராஜா எம்பிபிஎஸ், நான் ஈ, அருணாச்சலம், தெனாலி, சதீலீலாவதி ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும், சிகிச்சை பலனின்றி பிற்பகல் 2 மணிக்கு உயிரிழந்துள்ளார். அவரது மறைவிற்கு சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். வரும் 23ம் தேதி நடிகர் சங்கத் தேர்தல் வரும் நிலையில், கிரேசி மோகன் மறைவு கோலிவுட்டில் அதிர்ச்சியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக ராட்சசன் பட பழம்பெரும் நடிகர் கிரிஷ் கர்னாட் (81) காலமானார்.