திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தொடர்பாக இன்று மாலை காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள புதிய மருத்துவ அறிக்கையில் அவரது உடல்நிலையில் சற்று பின்னடைவு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இன்று மாலை மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவரது வயோதிகம் காரணமாக முக்கிய உடலுறுப்புகளின் இயக்கத்தை பராமரிப்பதில் சவால் நீடித்து வருகிறது. அவருக்கு தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பு மற்றும் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
இதில், மருத்துவ சிகிச்சைக்கு அடுத்த 24 மணி நேரத்தில் அவரது உடல் அளிக்கும் ஒத்துழைப்பை பொருத்து அவரது உடல்நிலையை தீர்மானிக்க முடியும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.