தமிழ்த் தேசிய இனத்­தின் விடு­த­லைïக்காக தமது இன்­னு­யிர்­களை ஈந்து, வித்­து­ டல்­க­ளாகப் புதை­கு­ழி­யில் விடு­த­லைத் தாகத்­தோடு உயிர்த்­தி­ருக்­கும் மாவீ­ரர்களைத் தட்­டி­யெ­ழுப்­பும் தமிழ்த் தேசிய எழுச்சி நாளாக மாவீ­ரர் நாள் மகத்­து­வம் பெறு­கி­றது.

அந்­த­வ­கை­யிலே எங்­கள் மூச்­சாகி, எங்­கள் வாழ்­வு­மாகி எங்­க­ளை­யெல்­லாம் இயக்­கு­கின்ற ஒப்­பற்ற தியாக மற­வர்­களை இன்­றைய தினத்­தில் நெஞ்­சில் கொலு­வி­ருத்தித் தலை வணங்­கு­கி­றோம். 1989 ஆம் ஆண்டு நவம்­பர் மாதம் 27 ஆம் நாள் தமி­ழீ­ழத்­தின் முத­லா­வது மாவீ­ரர் நாள் உணர்­வார்ந்த நிலை­யில் உன்­ன­த­மான நிகழ்­வாகக் கடைப்­பி­டிக்­கப்­பட்­டது. அதன் தொடர்­நி­லை­யாக இன்­று­வரைத் தமிழ்த் தேசி­யத்­தின் புனித நாளாக மாவீ­ரர் நாளைத் தமிழ் மக்­கள் கடைப்­பி­டித்து வரு­கின்­ற­னர்.விடு­தலை உணர்வை வலு­வா­கவே பற்றி நிற்­கின்­ற­னர்.

ஒளி முகங்­கள் புனி­த­மா­னவை!
மாவீ­ரர் துயி­லு­மில்­லங்­க­ளில் மாவீ­ரர் இசைப்­பா­டல் ஒலிக்க பொதுச் சுடர் ஏற்றி அக­வ­ணக்­கம் செலுத்­து­கின்ற தரு­ணம் ஆத்­மார்த்­த­மா­னது. கல்­ல­றை­க­ளில் இருந்து ஒளி­மு­கம் சூடிப் பேசு­கின்ற மாவீ­ரர்க­ளின் ஆன்ம நேசம் அற்­பு­த­மா­னது. அவர்­கள் கார்த்­தி­கைப் பூவின் வண்­ணங்­க­ளாய் மொழி­யும் கன­வுப் புன்­னகை அழி­வற்­றது. கண்­ணீர் மல்கி நின்­றிட ஆன்­மங்­களை வரு­டும் உணர்வு புனி­த­மா­னது.

“ஒரு விடு­தலை வீர­னின் சாவு ஒரு சாதா­ரண இறப்பு நிகழ்­வல்ல. அந்­தச் சாவு ஒரு சரித்­திர நிகழ்வு. ஓர் உன்­னத இலட்­சி­யம் உயிர் பெறும் அற்­பு­த­மான நிகழ்வு. உண்­மை­யில் ஒரு விடு­தலை வீரன் சாவ­தில்லை. அவ­னது உயி­ராக இயங்கி வந்த இலட்­சிய நெருப்பு என்­றுமே அணைந்து விடு­வ­தில்லை. அந்த இலட்­சிய நெருப்பு ஒரு வர­லாற்­றுச் சக்­தி­யாக மற்­ற­வர்­க­ளைப் பற்­றிக் கொள்­கின்­றது. ஓர் இனத்­தின் தேசிய ஆன்­மா­வைத் தட்­டி­யெ­ழுப்­பி­வி­டு­கின்­றது.” என்று தமி­ழீ­ழத் தேசி­யத் தலை­வர் வேலுப் பிள்ளை பிர­பா­க­ரன் கூறிய சித்­தாந்­தம் தாய்த் தேச­மெங்­கும் நிலை­பெ­று­கி­றது.

ழி­வின்­றிய மன­ப­லம்!
இந்­த­நி­லை­யில், உணர்­வு­க­ளின் வழி உறுதி கொள்­வ­தற்­கான திரு­நா­ளாக எம்­முன்னே இன்­றைய நாள் மலர்ந்­தி­ருக்­கி­றது. விழா­வாக அன்றி மாவீ­ரர்­க­ளின் நினை­வா­ல­யங்­க­ளின் முன்னே ஒன்­று­கூடி விடு­த­லை­யின் பற்­று­றுதி கொள்­வோம். மண்­ணில் உறங்­கும் மானிடத் தெய்­வங்­க­ளோடு மனம்­விட்­டுப் பேசு­வோம்.

சிங்­க­ளப் பேரி­ன­வா­தம் தமி­ழர்­களை அடக்கி, ஒடுக்கி அவர்­க­ளுக்­கான உரி­மை­களைத் தர மறுத்த சந்­தர்ப்­பத்­தில் விடு­த­லைப்­போ­ராட்­டம் ஆரம்­ப­மா­னது.தழி­ழீழ விடு­த­லைப் போராட்ட வர­லாற்­றில் வல்­ல­ர­சு­க­ளின் உத­வி­யும் ஆத்ம பல­மும் ஆக்­கி­ர­மிப்பு இரா­ணு­வத்­துக்குப் பக்­க­ப­ல­மாய் இருந்து உறு­துணை புரிந்த போதும், தமிழ் மக்­க­ளின் பாது­காப்பு அர­ணாக இருந்து எத்­த­கைய தியா­கத்­தை­யும் செய்­யத்­து­ணிந்த போரா­ளி­க­ளின் மன­ப­லம் உயிர் ஆயு­த­மாய் நிலை­பெற்­றது. அழிக்க முடி­யாத தனிப்­பெ­ரும் சக்­தி­யாக தமிழ் மக்­க­ளைக் காத்து நின்­றது. இப்­போ­து­மாய் வழி­ந­டத்­திச் செல்­கின்­றது. “இந்த மண் மகிழ்­வான வாழ்­வைப்­பெ­றும் என்ற நம்­பிக்­கை­யில் நான் சாவ­டை­கி­றேன்” எனச் சொல்­லிப்­போன ஒவ்வொரு புலி வீர­னது உயிர்த்­தி­யா­க­மும், தியா­கப்­ப­தி­வு­க­ளும் உணர்­வுள் கனன்று இலட்­சிய நெருப்பை உரு­வ­கித்­துக்­கொண்டே இருக்­கி­ன்றன.

இலட்­சி­யத்துக்காய் விதை­யா­கிப்­போன மாவீ­ரர்­கள்!
விடு­த­லைப்­போ­ரின் முதல் வித்­தொன்று 1982 ஆம் ஆண்டு நவம்­பர் மாதம் 27 ஆம் திக­தி­யன்று லெப்.சங்­க­ராக வீழ்ந்­தது.அதன் தொடர்­நி­லை­யாய் விடு­த­லைப்­போ­ரின் ஒவ்­வொரு மாற்­றங்­க­ளி­லும் வித்­தி­யா­ச­மான தியாக வடி­வங்­கள் தோற்­றம் கொண்­டன.

1987 ஆம் ஆண்டு யாழ்­குடா – வட­ம­ராட்­சியை முழு­மை­யாக ஆக்­கி­ர­மிக்­கும் நோக்­கோடு படை­ந­ட­வ­டிக்­கையை மூர்க்­கத்­த­ன­மாக மேற்­கொண்ட சிங்­க­ளப் படை­க­ளுக்கு எதி­ராகக் கரும்­புலி கப்­டன் மில்­லர் மேற்­கொண்ட தாக்­கு­தல் வீர­தி­ர­மா­னது. நெல்­லி­யடி மத்­திய மகா­வித்­தி­யா­ல­யத்­தில் அமைந்­தி­ருந்த படை­மு­காம் மீது கரும்­பு­லித் தாக்­கு­தலை மேற்­கொண்டு தமி­ழீழ விடு­த­லைப் போராட்ட வர­லாற்­றில் புதிய திருப்­பு­மு­னையை மில்­லர் ஏற்­ப­டுத்­தி­னார்.அதன்­வ­ழிப்­பட்டே அப்­போ­தைய ஜெ.ஆர்.அரசு இந்­தி­யா­வு­டன் ஒப்­பந்­தம் ஒன்றை மேற்­கொள்ள வேண்டிய கட்­டா­யம் ஏற்­பட்­டது என்­பது வர­லாறு.

தொடர்ந்து இந்­திய – இலங்கை ஒப்­பந்­தம் கைச்­சாத்­தி­டப்­பட்­ட­தன் அடிப்­ப­டை­யில் அமை­திப்­ப­டை­யாக உருத்­த­ரித்த இந்­திய இரா­ணு­வம் தாயக மண்­ணில் வந்­தி­றங்­கி­யது. ஆனா­லும் அது மேற்­கொண்ட ஊழித் தாண்­ட­வங்­கள் கட்­டு­மீ­றிச் சென்­றன. இந்­த­நி­லை­யிலே ஆயு­தம் தாங்­கிய விடு­த­லைப்­போ­ராட்­டம் ஒரு சந்­த­ர்ப்­பத்­திலே அகிம்­சைப் போராட்­ட­மாகப் பரி­ணா­மம் கொண்­டது. நல்­லூர்க் கந்­தன் ஆல­யத்­தின் முன்­ற­லில் லெப்.கேணல் திலீ­பன் தமிழ்­மக்­க­ளின் பிரச்­சி­னைக்கு தீர்வு வேண்டி ஐந்து அம்­சக்­கோ­ரிக்­கை­களை முன்­வைத்துச் சாகும்­வரை உணவு ஒறுப்­புப் போராட்­டத்தை மேற்­கொண்­டார்.

இலட்­சக்­க­ணக்­கில் மக்­கள் கண்­ணீ­ரோடு திரண்­டி­ருக்க 12 நாள்­கள் தொடர்ந்த அந்த அகிம்­சைப் போராட்­டத்தை இந்­தியா கண்­டு­கொள்­ள­வில்லை. திலீ­பன் முன்விவைத்த விட­யங்­களக்கு இறு­தி­வரை செவி­சாய்க்­க­வில்லை. திலீ­பன் தியா­கச் சாவ­டைந்­தார். அவர் பற்ற வைத்த இலட்­சிய நெருப்பு எங்­கும் பிர­கா­சம் தர ஆரம்­பித்­தது. இதைத் தொடர்ந்து இந்­திய இரா­ணு­வத்­து­ட­னான போர் நட­வ­டிக்­கை­யின்போது தமி­ழீழ விடு­த­லைப்­போ­ராட்­டத்­தின் முதல் பெண் மாவீ­ர­ராக 2 ஆம் லெப்.மாலதி தனித்­து­வம் பெறு­கி­றார்.

இவ்­வா­றாக 2009 ஆம் ஆண்டு காலப்­ப­கு­தி­வரை மாவீ­ரர்­க­ளின் வீர­மான தியா­கப் பதி­வு­கள் ஒவ்­வொன்­றும் தனித்­துவ நிலை பெறு­கின்­றன. தாய் மண்­ணின் விடு­த­லைக்­காக விதை­யா­ கிப்­போன பல்­லா­யி­ரம் மாவீ­ரர்­களை இந்­தத் திரு­நா­ளில் நினைந்து சுடர் ஏற்­றிப் பணி­வோம். மாவீ­ரர்­க­ளின் இலட்­சி­யக்­க­னவை நிறை­வேற்றுவதற்குத் திட­சங்­கற்­பம் பூணு­வோம்!