ஆஸ்திரியா நாட்டில், காகிதத்தால் செய்யப்பட்ட ராக்கெட் விடும் வினோத விளையாட்டு போட்டி நடைபெற்றது.

சால்ஸ்பர்க் நகரில், ஐந்தாவது ஆண்டாக நடைபெற்ற இந்த போட்டி, குறைந்த தூரம், நீண்ட தூரம் மற்றும் ஏரோபேட்டிக் என மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்டது. இதில் 58 நாடுகளில் இருந்து வந்திருந்த, 176 போட்டியாளர்கள் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.

இதில்இ நீண்ட தூரத்திற்கு காகித ராக்கெட்டை பறக்கவிடுபவர்கள், வெற்றியாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர். அமெரிக்காவின் ஜேக் ஹார்டி 56. 61 மீட்டர் தூரத்திற்கு ராக்கெட்டை வீசி, கோப்பையை தட்டிச்சென்றார். இதே போல் ஆஸ்திரேலியாவை சேர்ந்தஇ கேமரான் க்ளார்க் எனும் போட்டியாளர், 13 விநாடிகளுக்கு காகித ராக்கெட்டை காற்றில் பறக்கச் செய்து, சாதனை படைத்தார்.