ஓடியோடி சம்பாதிக்கும் பணத்தை வைத்து காஜல் அகர்வால் என்ன செய்கிறார் தெரியுமா? powered by Rubicon Project தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் காஜல் அகர்வால். அவர் தற்போது ஜெயம் ரவியின் கோமாளி படத்தில் நடித்து வருகிறார். ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாஸன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் ஹீரோயினும் காஜல் தான்.

தற்போது தெலுங்கில் ஒரு படத்தில் நடித்து வரும் அவருக்கு மேலும் ஒரு பட வாய்ப்பு கிடைத்துள்ளது. தமன்னா வெளியேறியதை அடுத்து ராஜு காரி காதி 3 படத்தின் ஹீரோயினாக நடிக்க உள்ளார் காஜல் அகர்வால். பாலிவுட்டில் தான் அவரால் இன்னும் ஒரு நிலைக்கு வர முடியவில்லை. இருப்பினும் மனதை தேற்றிக் கொண்டு தமிழ், தெலுங்கி படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். வருடத்தின் பெரும்பாலான நாட்கள் காஜல் படப்பிடிப்பு தளங்களில் தான் இருக்கிறார். அப்படி கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணம் வீணாகாமல் இருக்க அதை மும்பையில் முதலீடு செய்து கொண்டிருக்கிறார். காஜல் மும்பையில் சொந்தமாக நகைக் கடை வைத்துள்ளார். அதனால் அவர் சம்பாதிக்கும் பணம் எல்லாம் அந்த கடைக்கு தான் போகிறது. இந்தியாவில் தங்கத்தின் விலை விண்ணைத் தொட்டாலும் மக்கள் அதை வாங்கத் தவறுவது இல்லை. இதை நன்கு புரிந்து வைத்துள்ள காஜல் நகைக் கடை வைத்துள்ளார். பல நடிகைகள் ஹோட்டல் பிசினஸ் துவங்கி நஷ்டம் அடைந்ததை பார்த்த அவர் அதில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு தெளிவாக செயல்பட்டுள்ளார். அதில் தவறு எதுவும் இல்லை. அவர் பணம், அவர் இஷ்டம். காஜல் பிசினஸ், படங்கள் என்று பிசியாக ஓடிக் கொண்டிருக்கிறார். ஆனால் அவரின் பெற்றோரோ அவரை நினைத்து தான் தினமும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அது வேறு ஒன்றும் இல்லை, 34 வயதாகியும் காஜல் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் மொரட்டு சிங்கிளாக இருப்பது தான் அவர்களின் கவலை. அவர்களும் மாப்பிள்ளை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்களாம். ஆனால் காஜலுக்கு ஏற்ற மாப்பிள்ளை அமைய மாட்டேன் என்கிறதாம். இந்த ஆண்டுக்குள் காஜலுக்கு திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்று அவரின் பெற்றோர் முடிவு செய்துள்ளார்களாம். காஜல் இருக்கும் பிசியை பார்த்தால் கல்யாணத்திற்கு எல்லாம் நேரம் இருக்குமா?