ரோஸ் கிப்ஸ் என்பது காட்டு ரோஜா செடியில் உள்ள ஒரு வகை பழமாகும். இதை ரோஸ் ஹெப் அல்லது ரோஸ் ஹவ் என்றும் அழைக்கின்றனர். இது பார்ப்பதற்கு ஆரஞ்சு நிறத்தில் இருந்து ஊதா கருப்பு கலந்த நிறம் வரை காணப்படுகிறது. இந்த ரோஸ் கிப்ஸ் வளர்வது கோடையின் பிற்பகுதியில் ஆரம்பித்து இலையுதிர் காலம் வரை வளரும்.

ரோஸ் கிப்ஸ் நிறைய பயன்பாடுகளுக்கு உதவுகிறது. சிறுநீரகங்களின் செயல்பாட்டிற்கும், வயிற்றுப் போக்கை நிறுத்த பாரம்பரிய சீன மருத்துவத்திலும் பயன்படுகிறது.

100 கிராம் ரோஸ் கிப்ஸ் பழத்தில் 58.66 கிராம் நீர்ச்சத்தும், 162 கிலோ கலோரிகள் ஆற்றலும் கிடைக்கிறது. மேலும் இதில், * 1.60 கிராம் புரோட்டீன் * 0.34 கிராம் கொழுப்பு * 38.22 கிராம் கார்போஹைட்ரேட் * 24.1 கிராம் நார்ச்சத்துகள் * 2.58 கிராம் சர்க்கரை * 169 மில்லி கிராம் கால்சியம் * 1.06 கிராம் இரும்புச் சத்து * 69 மில்லி கிராம் மக்னீசியம் * 61 மில்லி கிராம் பாஸ்பரஸ் * 429 மில்லி கிராம் பொட்டாசியம் * 4 மில்லி கிராம் சோடியம் * 0.25 மில்லி கிராம் ஜிங்க் * 426 மில்லி கிராம் வைட்டமின் சி * 0.016 மில்லி கிராம் தையமின் * 0.166 மில்லி கிராம் ரிபோஃளவரின் * 1.300 மில்லி கிராம் நியாசின் * 0.076 மில்லி கிராம் வைட்டமின் பி6 * 4345 IU வைட்டமின் ஏ * 5.84 மில்லி கிராம் வைட்டமின் ஈ * 25.9 மைக்ரோ கிராம் வைட்டமின் கே போன்ற சத்துக்கள் உள்ளன. இப்போது ரோஸ் கிப்ஸின் உடல் நல நன்மைகளைக் காண்போம்.

ஐரோப்பிய ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, ரோஸ் கிப்ஸ் இதய நோய்களை தடுக்கும் குணம் கொண்டுள்ளது என்பது தெரிய வந்துள்ளது. மேலும் இது சிஸ்டாலிக் இரத்த அழுத்தத்தை மேம்படுத்துகிறது. மேலும் இரத்தத்தில் கலந்துள்ள கொழுப்பின் அளவை குறைக்கிறது.

நீரிழிவு நோயாளிகளுக்கு உடல் பருமன் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் பிசியாலஜியில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, ரோஸ் கிப்ஸ் பழத்தில் இருந்து தயாரிக்கப்படும் பொடி கல்லீரலில் தேங்கியுள்ள கொழுப்பு செல்களை கரைக்கிறது. மேலும் இந்த தாவரத்தில் உள்ள வேறு சில பொருட்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.

ரோஸ் கிப்ஸ் சாற்றை தினமும் காலையில் எடுத்துக் கொண்டு வந்தால் அடிவயிற்றில் தேங்கியுள்ள கொழுப்புகள் கரைந்து விடும். மேலும் வயிற்று கொழுப்பு, வயிற்றின் உள்ளுறுப்பு கொழுப்பு, உடல் எடை குறைப்பு, உடல் எடை நிறை குறியீட்டு எண் பராமரிப்பு போன்ற வேலைகளை செய்கிறது. டயாபெட்டீஸ் மற்றும் மெட்டபாலிக் நோய்க்குறி மற்றும் உடல் பருமன் தெரபி கூற்றுப்படி ரோஸ் கிப்ஸ் உடல் பருமனை குறைக்க மிகவும் சிறந்தது என்கின்றனர்.

ரோஸ் கிப்ஸ் மார்பக புற்றுநோய் வளர்ச்சியை தடுக்க 45% வரை உதவுகிறது. உணவு மற்றும் வேளாண்மை அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, ரோஸ் கிப்ஸில் உள்ள பைட்டோ கெமிக்கல்கள் மனித புற்றுநோய் செல்கள் பெருகுவதை தடுக்கிறது.

ரோஸ் கிப்ஸில் ஏராளமான வைட்டமின் சி சத்துக்கள் அடங்கியுள்ளது. எனவே இது அழற்சியை போக்கி நோயெதிப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. மேலும் ஜலதோஷம், ப்ளூ போன்ற நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது.