அசைவ உணவு என்பது இன்று பலரால் விரும்பப்படும் உணவாகி விட்டது. மூன்று வேலை முதல் ஆறு வேளை வரை கூட அன்றாடம் அசைவ உணவினை மட்டுமே உண்பவர்கள் ஏராளம். காய்கறி, பழ உணவுகளை கண்ணால் காண்பதனைக் கூட மிகப் பெரிய தவறாக இவர்கள் கருதுவார்கள். இத்தகையோரிடம் காய்கறி உணவினை வலியுறுத்துவது கடினமான செயல் ஆகி விடுகின்றது. காய்கறி, பழங்களின் பலனைப் பெற அசைவ உணவினை கைவிட முடியாவிட்டாலும் தாவர வகைகளை உணவில் சேர்த்துக் கொண்டாலே பல நன்மைகளை பெற்று விடலாம்.

* தாவர வகை உணவினை உட் கொள்வதன் மூலம் நீர்சத்து குறைபாடால் ஏற்படும் தலைவலி குறையும்.

* மைக்ரேன் எனப்படும் ஒற்றை தலைவலி பாதிப்பு குறையும்.

* ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராய் இருக்கும். சர்க்கரை நோய் பாதிப்பின் அபாயம் 18 சதவீதம் குறையும்.

* தாவர வகை உணவு புற்று நோய் தவிர்ப்பிற்கான சிறந்த முறையாகும்.

* கல்லீரல் பாதிப்பிற்குச் சிறந்தது.

* தாவர வகை உணவில் கிடைக்கும் வைட்டமின்கள், தாது உப்புகளால் ஜலதோஷ பாதிப்பு வெகுவாய் குறையும்.

* ஆஸ்துமா பாதிப்பு உடையவர்கள் தாவர வகை உணவினை உட்கொள்வதன் மூலம் ஆஸ்துமா பாதிப்பு வெகுவாய் குறையும்.

* வயிற்றுப் புண், உப்பிசம், நெஞ்செரிச்சல், வயிற்றுப் பிரட்டல் ஆகியவை உடையவர்கள் தாவர வகை உணவின் மூலம் பயனடைவர்.

* மனச் சோர்வு, அழுத்தம் உடையவர்களுக்கு தாவர வகை உணவே பரிந்துரைக்கப்படுகின்றது.

* உயர் ரத்த அழுத்தம் உடையவர்கள் தாவர வகை உணவின் மூலம் உயர் ரத்த அழுத்தத்தினை குறைக்க முடியும்.

* இதிலுள்ள நார்சத்து மலச்சிக்கலை நீக்கும்.

* தாவர வகை உணவில் உப்பு குறைவாகவே உபயோகிக்கப் படுவதால் உடலில் அதிக உப்பு சேர்வதும் தடுக்கப்படுகின்றது.

சிலருக்கு திடீரென கை விரல்களில் வீக்கம் போன்ற உப்பிசம் இருக்கும். பொதுவில் உடலில் அதிக உப்பு இருந்தாலும் இப்படி ஏற்படும். அதிக சூடும் இவ்வாறு வீக்கத்தினை ஏற்படுத்தும் என ஆயுர் வேதத்தில் குறிப்பிடுகின்றனர்.