ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் குல்காம் மாவட்டத்துக்கு உட்பட்ட கெல்லம் கிராமத்தில் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்று அதிகாலை அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இருதரப்பினருக்கும் இடையில் தொடர்ந்து நீடித்துவரும் துப்பாக்கிச் சண்டையில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த மோதலின்போது சுமார் 10 பேர் காயமடைந்ததாகவும் தெரியவரும் நிலையில் ராணுவத்தரப்பில் உண்டான இழப்பு தொடர்பாக உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.