சமீபத்தில் ஜெருசலேம் நகரில் அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காஸாவில் எல்லையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், இஸ்ரேல் படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 60 பாலஸ்தீனர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

இச்சம்பவம் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது, இந்நிலையில் கனடா பிரதமரரான ஜஸ்டின் ட்ரூடோ இச்சம்பவம் குறித்து நடுநிலையான விசாரணை நடத்த வேண்டும் என்று வழியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, காஸா எல்லையில் ஆர்பாட்டக்காரர்களுக்கு எதிராக அளவுக்கு அதிகமான ஆயுத பலத்தைப் பயன்படுத்தியதும், உயிர் குடிக்கக் கூடிய உண்மையான குண்டுகளைப் பயன்படுத்தி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதும் மன்னிக்க முடியாத குற்றமாகும்.

இந்தச் சம்பவம் தொடர்பான உண்மை நிலவரத்தை வெளிக் கொணரும் வகையில், நடுநிலையான விசாரணைக்கு உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.