அரபிக் கடலில் கியார் புயல் ஏற்பட்டுள்ள நிலையில், ‘மகா’ என்ற மற்றொரு புயல் ஏற்பட்டுள்ளது என இந்தியா வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கடலோர மாவட்டங்களில் உள்ள பயிர்கள் மற்றும் உப்பளங்களை வெகுவாக பாதிக்கக்கூடும் என நம்பப்படும் இந்த ‘மகா’ புயல், திருவனந்தபுரத்தில் இருந்து 320 கி.மீ. மேற்கு வடமேற்கு திசையில் நிலைகொண்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.