முதல் முறையாக விஞ்ஞானிகள் பிரபஞ்சத்தின் மிகப்பெரிய மற்றும் கடினமான முப்பரிமாண உருவகப்படுத்துதலை உருவாக்குவதற்காக செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தியுள்ளனர். இது ஆழ் அடர் இடப்பெயர்ச்சி மாதிரி(Deep Density Displacement Model) அல்லது D3M என்று அழைக்கப்படுகிறது.

அது மிகவும் வேகமாகவும் மிகவும் துல்லியமாகவும் செயல்படும் நிலையில், இதை வடிவமைத்த வான் இயற்பியலாளர்களுக்கு கூட எவ்வாறு, எப்படி இது இப்படி செயல்படுகிறது என புரியவில்லை.

பல பில்லியன் கணக்கான ஆண்டுகளாக பிரபஞ்சத்தை எவ்வாறு ஈர்ப்புவிசை வடிவமைத்தது என இது துல்லியமாக உருவகப்படுத்தி காண்பித்துள்ளது. மற்ற சில உருவகப்படுத்துதல்களுக்கு எடுக்கும் 1 நிமிடத்தை ஒப்பிடுகையில், இதில் ஒவ்வொரு உருவகமும் வெறும் 30 மில்லி செகெண்டுகளை மட்டுமே எடுக்கிறது.

மேலும் இன்னும் கவர்ச்சிகரமான, D3Mஆனது அதன் குழுவால் உள்ளீடு செய்யப்பட்ட 8,000 பயிற்சி உருவகப்படுத்துதலில் இருந்து கற்று, அவற்றை பரவலாக பொதுப்படுத்தி, சிறப்பாக செயலாற்றியதுடன், பயிற்சி பெறாதவற்றிலும் அளவுருக்கள் சரிசெய்யும் திறனையும் பெற்றது.

“இது எப்படி இவ்வாறு செயல்படுகிறது என யாருக்கும் தெரியாது மற்றும் இது தீர்க்கப்பட வேண்டிய ஒரு மிகப்பெரிய மர்மம்” என்கிறார். நம்மைச் சுற்றியுள்ள பிரபஞ்சம் பற்றி ஆய்வுகள் அதன் பரிணாமத்தைப் பற்றிய நிறைய தகவலை வழங்க முடியும். ஆனால் நாம் பார்க்கக்கூடியவற்றிற்கு வரம்புகளும் உள்ளன. இதனால்தான் உருவாகப்படுத்துதல் மிகவும் எளிதானது.