நீங்க சைவ உணவு சாப்பிடுபவரா? அப்போ இது உங்களுக்கு தான். அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷனில் (ஜஹா) வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, சைவ உணவுகளை எடுத்துக் கொள்பவர்களுக்கு மாமிச உணவுகளை உண்பவரை காட்டிலும் இதய நோய்கள் வரும் வாய்ப்பு குறைவாக உள்ளது என்று ஒர் நற்செய்தியை வெளியிட்டு உள்ளது. நீங்க வெஜிட்டேரியனா அப்போ உங்களுக்கு இதய நோய்கள் வர வாய்ப்பில்லையாம்.

அதே மாதிரி வெஜிட்டேரியன் ஆனால் தாவர வகை உணவுகளை உண்ணாமல் மாமிச உணவுகளை அதிகமாக எடுத்துக் கொண்டு வருபவர்களுக்கு 16% இதய நோய்கள் வர வாய்ப்புள்ளது.

கிட்டத்தட்ட 12,168 நடுத்தர வயதை உடைய நபர்களை இந்த ஆராய்ச்சிகளுக்கு உட்படுத்தினர். அவர்களின் உணவுப் பழக்க வழக்கங்கள் போன்றவற்றை இது குறித்து ஆராய்ந்தனர். இதில் 5436 பேர்கள் இறந்துள்ளனர் அதில்1565 பேர்கள் இதய நோய் களால் இறந்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. ரூபிகான் திட்டத்தின் ஆய்வின்படி, மாமிச உணவுகளை உண்பவர்களுக்கு தாவர உணவுகளை உண்பவரை காட்டிலும் 31-32% இதய நோய்களும், 18 – 25 % இதர நோய்களும் வர வாய்ப்புள்ளது என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிய வந்துள்ளன. அதே மாதிரி வெஜிட்டேரியன் ஆனால் தாவர வகை உணவுகளை உண்ணாமல் மாமிச உணவுகளை அதிகமாக எடுத்துக் கொண்டு வருபவர்களுக்கு 16% இதய நோய்கள் வர வாய்ப்புள்ளது.

எனவே தற்போது தாவர வகை உணவுகள் மக்களிடையே புகழ்பெற்று வருகிறது. இந்த மாதிரி தாவர வகை உணவுகளை உட்கொள்வது உங்கள் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. காய்கறிகள், பழங்கள் மற்றும் முழு தானியங்களை எடுத்துக் கொள்ளுங்கள். மாமிசம், சிகப்பு இறைச்சி போன்றவை வேண்டாம் என்கிறார்கள் ஆய்வின் மூத்த குழு உறுப்பினரும், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ப்ளூம்பெர்க் பொது சுகாதார பள்ளியின் ஆராய்ச்சியாளருமான கேசி ரெபோல்ஸ் கூறினார்.

இந்த ஆராய்ச்சிகளின் மூலம் உணவுகளை நான்கு வகைகளாக பிரித்தனர். முழுவதும் தாவர அடிப்படையிலான உணவுகள் பச்சை காய்கறிகள் முழுமையான வெஜிட்டேரியன் டயட் ஆரோக்கியமற்ற தாவர உணவுகள் :உருளைக்கிழங்கு போன்றவை. பின்பற்றுதல் இந்த ஆராய்ச்சியின் போது மக்கள் முதல் மூன்று வகையான தாவர உணவுகளை எடுத்துக் கொண்டார்கள். ஒரு நாளைக்கு ஒரே ஒரு நேரம் மட்டும் மாமிச உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.

அதிக ஆரோக்கியமான தாவர உணவுகளை எடுத்துக் கொண்டு குறைவான மாமிச உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது இதய நோய் அபாயத்தை குறைக்க முடிகிறது. அதே சமயத்தில் ஆரோக்கியமற்ற தாவர வகை உணவுகளை எடுத்துக் கொண்டவர்களுக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்க வில்லை. எனவே இதய நோய்கள் வராமல் தடுக்க வேண்டும் என்றால் ஆரோக்கியமான தாவர வகை உணவுகளை எடுத்துக் கொண்டு வாருங்கள் என்று இந்த ஆராய்ச்சி தெரிவிக்கிறது.