தற்கொலை குண்டுதாரியின் உடற்பாகங்களை மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் புதைக்க முடியாது என இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மாநகர சபை மேயர் தி.சரவணபவன் தலைமையில் இன்றைய பொது அமர்வு நடைபெற்றது.

மட்டக்களப்பு – கள்ளியங்காடு மயானத்தில் பயங்கரவாதியின் உடற்பாகங்கள் புதைக்கப்பட்டமை தொடர்பிலான விவாதம் இதன்போது நடைபெற்றது.

மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குள் இருந்து தோண்டி எடுக்கப்பட்டு வைத்தியசாலைக்குள் வைக்கப்பட்டுள்ள உடற்பாகங்களை மாநகர எல்லைக்குள் புதைக்க முடியாது எனும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.