பிரபல சமூக வலைதளமான கூகுள் பிளஸ் மூடப்படுகிறது.

கூகுள் பிளஸ் சமூக வலைத்தளம் மிகவும் பிரபலமானது. கூகுள் நிறுவனம் கொண்டு வந்த தயாரிப்புகளில் இதுவும் முக்கியமானது.இந்த முக்கியமான தளம் தற்போது மூடு விழாவை சந்தித்துள்ளது. இன்றோடு இந்த தளம் நிரந்தரமாக மூடப்படுகிறது.

இது பேஸ்புக்கிற்கு போட்டியாகத்தான் தொடங்கப்பட்டது. பேஸ்புக்கின் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் நோக்கில் கூகுள் இந்த கூகுள் பிளஸ் சமூக வலைத்தளத்தை வெளியிட்டது. கூகுள் அக்கவுண்ட் வைத்திருக்கும் எல்லோரும் இதில் எளிதாக சேர்ந்து கொள்ள முடியும்.

ஆனால் கூகுள் நிறுவனம் நினைத்த அளவிற்கு கூகுள் பிளஸ் சரியாக இயங்கவில்லை. இதில் பயனாளிகளின் எண்ணிக்கையும் மிகவும் குறைவாகவே இருந்தது. அதேபோல் இதில் பாதுகாப்பு அம்சங்களும் குறைவாகவே இருந்தது.

இதனால், தற்போது பல பயனாளிகளின் தகவல்கள் திருட்டப்பட்டு இருக்கிறது. மொத்தமாக 5 லட்சம் பேரின் தகவல்கள் திருடப்பட்டு இருக்கிறது. அடிப்படை விவரங்கள் மட்டுமே திருடு போய் இருப்பது கூகுள் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

இதை அடுத்து கூகுள் பிளஸ் நிறுவனம் மூடப்படுகிறது. இதன் சேவை மொத்தமாக நிறுத்தப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கூகுள் நிறுவனம் வெளியிட்டது. இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.