கூகுள் பிளே ஸ்டோரில் புதிய பட்டன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொழி பெயர்ப்பு வசதியம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இது எளிமையான முறையாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

கூகுள் நிறுவனம் பிளே ஸ்டோர் ஆண்ட்ராய்டு இயங்குளத்தை கொண்ட ஸ்மார்ட்போன்களுக்கு அப்ளிகேஷன்களைக் கொடுக்கிறது. இதில் அண்மைக் காலமாக புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஒவ்வொரு அப்ளிகேஷனிலும் அந்த அப்ளிகேஷன் ப்றறி தகவல் ஆங்கிலம் அல்லாத பிற மொழிகளில் இந்தால் அதனை மொழி பெயர்க்கும் வசதி அறிமுகமாகி உள்ளது.

பிற மொழியி; உள்ள ஆப் பற்றி தகவல்களுக்கும் கீழ் டிரான்ஸ்லேட் என்ற பட்டன் இருக்கும். இதை ஆன் செய்தால், ஆப் தகவல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்படும். தற்போது இதை சோதனை முறையில் கூகுள் நிறுவனம் பரிசோதிக்கின்றது. விரைவில் பொது பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.