இதற்குமுன்பு இந்த செயலியில் பயனர்கள் விபத்து மற்றும் போக்குவரத்து இடையூறுகளை தெரிவிக்கும் வசதி வழங்கப்பட்டது, ஆனால் தற்சமயம் புதிய போக்குவரத்து நெரிசல் அம்சத்தை சேர்த்துள்ளது கூகுள் நிறுவனம்.

கூகுள் மேப்ஸ் பயனர்கள் இனி ஆண்ட்ராய்டு பதிப்பின் விபத்து தெரிவிக்கும் ஆப்ஷனில் ஸ்லோடவுன் (Slowdown) வசதி மூலம் நெரிசல் இருக்கும் பகுதிகளை மிக எளிமையாக தெரிந்துகொள்ள முடியும்.

இந்த அம்சம் முதற்கட்டமாக ஆண்ட்ராய்டு தளத்தில் சேர்க்ப்பட்டிருக்கும் நிலையில், ஐஒஎஸ் இயங்குதளங்களில் வழங்கப்பட்டிருக்கிறதா என்பதை குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம் கூகுள் மேப்ஸ் செயலியில் விபத்துகள் மற்றும் வேக கட்டுப்பாடு பகுதிகளை தெரிவிக்கும் வசதி சேர்க்கப்பட்டது, இதற்கென கூகுள் மேப்ஸ் செயலியில் ஆட் எ ரிப்போர்ட் (Add a report) வசதி சேர்க்கப்பட்டது. இந்த வசதியை கிளிக் செய்ததும் விபத்து அல்லது வேக கட்டுப்பாட்டு பகுதி பற்றிய விவரங்களை கூகுளுக்கு நேரடியாக தெரிவிக்கலாம்.