இந்தியாவில் ஏராளமான மாடல்போன்களை அறிமுகம் செய்யும் நிறுவனமாக சாம்சங் நிறுவனம் இருக்கின்றது. இந்நிறுவனத்தின் அனைத்து மாடல்களும் இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

விற்பனையிலும் முன்னணியிலும் சாம்சங் நிறுவனம் இருப்பதால், தற்போது பல்வேறு புதிய தொழில் நுட்ப வசதிகளுடன் போனை அறிமுகம் செய்து வருகின்றது. தற்போது அனைவரும் வியக்கும் வகையில் சாம்சங் கேலக்ஸி ஏ9 ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருகின்றது. இதில் என்னென்ன புதிய அம்சங்கள் இருக்கின்றது விலையும் என்னென்ன வென்று தெரிந்து கொள்ளலாம் வாங்க.

சாம்சங் கேலக்ஸி ஏ9 ஸ்மார்ட்போன் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. மலேசிய அறிமுக நிகழ்வின் போதே ஸ்மார்ட்போன் இந்தியாவில் நவம்பர் மாதத்திற்குள் அறிமுகமாகும் என்று சாம்சங் அறிவித்துள்ளது.

அந்த வகையில் இந்தியாவில் கேலக்ஸி ஏ9 ஸ்மார்ட் போன் விலை ரூ. 39,000 விற்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு ஆன்லைனில் நிறுவனங்களில் தள்ளுபடியும் கொடுக்கப்படலாம் என்று தெரிகின்றது.

சாம்சங் கேலக்ஸி ஏ9 ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் சூப்பர் அமோல்டு ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், 8 ஜிபி ரேம், பின்புறம் கைரேகை சென்சார் மற்றம் 3800 எம்ஏஹெச்பேட்டரியு, பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளது.

6.3 அமோல்டு ஸ்கிரீன் இன்பினிட்டி டிஸ்பிளே, ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன், 710 என்எம் பிராசஸர், அட்ரினோ 616 ஜிபியூ 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி.

இதில் 8.0 ஆன்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம், டூயல் சிம் ஸ்லாட், 24 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் எப்.1.7 அப்ரேச்சர், 10 எம்பி டெலிபோட்டோ லென்ஸ் எப். 2.4 , 8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் கேமரா, உள்ளிட்டவை இருக்கின்றது.

5 எம்பி டெப்த் கேமரா, 24 எம்பி செல்பி கேமரா எப் 2.0, கைரேகை சென்சார், 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், 3800 எம்ஏஹெச் பேட்டரி, அடாப்டிப் பாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளது.