வீடு, தெருக்கள் என எங்கெல்லாம் தண்ணீர் தேங்கியிருக்கிறதோ அதெல்லாம் கொசுக்களுக்கு மிகவும் பிடிக்கும். அதிலும் சாலையோரங்களில் சாக்கடைகளில் தான் அது முட்டையிட்டு பல ஆயுிரக்கணக்கான கொசுக்களை உற்பத்தி செய்கிறது. அதுதான் அவைகளின் ஹாங்கவுட் இடமாக மாறியிருக்கும்.

முடிவு? கொசு கடி மற்றும் அரிப்பு. கொசுக்கள் மிகவும் கொடிய தொற்று நோய்களில் சிலவற்றுக்கு மிக முக்கியக் காரணமாக இருக்கிறது. ஒரே இடத்தில் இருக்கும் எல்லோரையும் கொசு கடிக்காது. சிலரை மட்டும் கடிக்கும். சிலரை கடிக்காது. காரணம் அவர்களுடைய ரத்த வகைதான். சில குறிப்பிட்ட ரத்த வகைகளை மட்டும் கொசு எளிதில் கண்டுபிடித்து கடிக்கும். அது எப்படி கண்டுபிடிக்கிறது என்பதைப் பற்றி பார்ப்போம்.

உலக மக்கள் தொகையில் சுமார் 20% கொசு கடியால் பாதிக்கப்படுவதாக நம்பப்படுகிறது. இது ஏன் என்று யோசித்தீர்களா? இங்கே சில உண்மைகள் உள்ளன. மனிதர்களில் 85% பேர் அவர்களது ரத்த வகையை அறியக்கூடிய ஹார்மோன் சுரப்பு கொண்டுள்ளனர். மீதி 15% அவ்வாறு இல்லை. கொசுக்கள், அச்சுரப்பிகளினால் அதிகம் கவரும் விதத்திலேயே காணப்படுகின்றன. மேலும், ஒரு ஆய்வு, கொசுக்கள் A வகை ரத்தம் உடையவரை விட O வகை இரத்தம் கொண்டவர்களை அதிகமாகக் கடிக்கக்கூடியதாக இருப்பதாகக் கண்டறிந்துள்ளது. வகை B இரத்தம் உள்ளவர்கள் நடுவில் எங்காவது வந்து விடுவார்கள்.

கார்பன் டை ஆக்சைடு மற்றொரு வழி. கொசுக்கள் தங்கள் இலக்கை அடையாளம் காண, உங்களால் வெளியேற்றப்பட்ட கார்பன் டை ஆக்சைடை நுண்ணுயிர் பால்ப் என்றழைக்கப்படும் ஒரு உறுப்பைப் பயன்படுத்தி எளிதில் கண்டறிய முடியும்.

உடற்பயிற்சி மற்றும் பல்வேறு உடல் வளர்சிதை மாற்றங்கள் கூட கொசு கடி பாதிப்புக்குள்ளாகும். அதனால் உடலுக்கு நன்மை தருகின்ற உடற்பயிற்சியாக இருந்தாலும் அளவோடு செய்யுங்கள்.

கொசுக்கள் உங்கள் உடலிலிருந்து வெளியேற்றப்படும் அம்மோனியா, யூரிக் அமிலம், மற்றும் லாக்டிக் அமிலம் போன்ற பொருட்களையும் உணர முடியும். அதிக உடல் வெப்பநிலை கொண்டவர்களால் கொசுக்கள் கவரப்படுகிறது. குறிப்பாக சிறுநீர் வெளியேற்றுகிற சமயத்தில் கொசு உங்களை மிக எளிதில் கணடுபிடித்துவிடுகிறது.

மற்றொரு ஆராய்ச்சியானது, சில வகை பாக்டீரியா அதிக அளவில் கொண்ட ஒருவரின் தோல், கொசுக்களுக்கு அதிக கவர்ச்சிகரமானதாக இருக்கும் என கூறுகிறது. அதனால் எளிதில் கண்டுபிடித்துவிடும்.

ஒரு மர்மமான கண்டுபிடிப்பு, ஒரு பாட்டில் பீர் எடுத்துக் கொள்ளும் ஒரு நபர் கொசுக்களுக்கு மிகவும் கவர்ச்சிகரமாக கருதப்படுகிறார். என்ன பீர் குடித்து மட்டையாகிவிட்டால், கொசு கடிப்பது உங்களுக்குத் தெரிவதில்லை.

உங்கள் மரபணுக்கள் கொசுக்களுக்கு மிகவும் கவர்ச்சிகரமானவையா இல்லையா என்பதை முடிவு செய்யும் காரணிகளில் ஒன்றாகும். துரதிருஷ்டவசமாக, இன்னும் அந்த மரபணுக்களை மாற்றியமைக்கும் ஒரு வழி இல்லை.