ஐபிஎல் தொடரில் விளையாடும் முன்னணி அணிகளில் ஒன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இந்த அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து தென்ஆப்பிரிக்காவின் கல்லீஸ், சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், அதிரடி பேட்ஸ்மேனும் ஆன பிரெண்டன் மெக்கல்லம் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக 2008 முதல் 2010 வரையும், 2012 முதல் 2013 வரையும் வீரராக பங்கேற்றுள்ளார்.

மேலும், கரீபியன் பிரிமீயர் லீக்கில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.