இலங்கை – நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. காலேயில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இலங்கை வெற்றி பெற்றது.

இந்நிலையில் 2-வது டெஸ்ட் கொழும்பில் இன்று தொடங்கியது. மழை பெய்ததால் மதிய உணவு இடைவேளை வரை ஆட்டம் தொடங்கவில்லை. மதிய உணவு இடைவேளைக்குப்பின் மழை நின்றதும் ஆட்டம் தொடங்கியது. இலங்கை டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. தேனீர் இடைவேளை வரை 29 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 71 ரன்கள் எடுத்திருந்தது.

தேனீர் இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்க இருந்த நிலையில் மீண்டும் மழை குறுக்கீட்டது. மழை நின்றதும் மீண்டும் ஆட்டம் தொடங்கியது. இலங்கை 2 விக்கெட் இழப்பிற்கு 85 ரன்கள் எடுத்திருக்கும்போது போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

கருணாரத்னே 49 ரன்களுடனும், மேத்யூஸ் ரன்கள் ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.