கொழும்பு – கண்டி பிரதான வீதியின் நிட்டம்புவ, கலல்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவ்ர உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.

இன்று (07) அதிகாலை மணல் ஏற்றிச் சென்ற லொறி ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான ஐவரை வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அதில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

பஸ்யால பகுதியை சேர்ந்த 71 வயதுடைய பெண் ஒருவரும் 73 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் நிட்டம்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.