இந்திய அணி திறமையான வீரர்கள் அடங்கியுள்ள அணியாக உள்ளது. திறமை மிக்க இளம் வீரர்களின் வரவு அணியை தெம்பூட்டுகிறது என பிரித்வி ஷா மற்றும் சுப்மன் கில் வரவு குறித்து சச்சின் கூறியுள்ளார்.

டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளதோடு ஒருநாள் மற்றும் டி20 தரவரிசையில் 2ம் இடத்தில் இந்திய அணி உள்ளது.

சச்சின் பெருமிதம் :
இந்திய அணியின் சீனியர் வீரர்கள் மட்டுமின்றி தற்போது அணியில் இடம்பெற்றுள்ள பிரித்வி ஷா மற்றும் சுப்மன் கில் போன்ற இளம் வீரர்களின் பங்களிப்பு மிக சிறப்பாக உள்ளது.
19வயதே ஆன இவர்கள் மீது அணியின் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இருப்பினும் இக்கட்டன சூழலிலும் அவர்கள் சிறப்பக விளையாடி வருகின்றனர்.

19வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை இந்திய அணிக்கு வென்று கொடுத்த கேப்டன் பிரித்வி ஷா. கடந்தாண்டு டெஸ்ட் தொடரில் அறிமுகமானார். அவரின் வருகைக்கு பின்னர் இந்திய அணிக்கு புதிய தொடக்க வீரர் கிடைத்துள்ளார் என்ற தெம்பு கிடைத்துள்ளது.

அதே சமயம், ரஞ்சி போட்டியில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வந்த சுப்மன் கில், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட அழைக்கப்பட்டார். அவரும் தன் பொறுப்பை உணர்ந்து ஆடினார்.

நான் பிரித்வி ஷா 8-9 வயது இருக்கும் போதே அவரின் திறமை குறித்து பாராட்டியுள்ளேன். தற்போது அவரின் திறமை இன்னும் அதிகரித்துள்ளது.
வருங்கால சிறப்பான இந்திய அணியை இவர்களின் வருகையின் மூலம் தெரிகிறது. தற்போது அணியை வழிநடத்தும் கோலி சிறப்பாக செயல்படுகிறார் என சச்சின் தெரிவித்துள்ளார்.