பரபரப்பாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் 3 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதிகப்படியான நாட்களில் கவின் – லோஸ்லியா காதல் விவகாரத்தை முன்னிலைப்படுத்தியே எபிசோடு நகர்ந்து வந்துள்ளது என்று கூறினால் மிகையாகாது. இந்த வாரம் முழுவதும் நடந்து முடிந்த டிக்கெட் ஃபினாலே டாஸ்க்கில் எந்த போட்டியாளர் வெற்றி பெற்றாரோ அவருக்கு கோல்டன் டிக்கெட் வழங்கப்பட்டு நேரடியாக இறுதிப்போட்டிக்கு செல்வார்.

அதே போன்று டாஸ்க்கில் பின்தங்கிய போட்டியாளர் வெளியேற்றப்படவும் வாய்ப்பிருக்கிறது. அப்படிப்பார்த்தால் முகென் அல்லது தர்ஷன் இருவரில் யாரேனும் ஒருவருக்கு அந்த கோல்டன் டிக்கெட் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே போன்று சேரன், கவின், ஷெரின் ஆகியோரில் யாரேனும் ஒருவர் போட்டியிலிருந்து வெளியேற்றப்படும் வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால், சேரன், கவின், லோஸ்லியா, ஷெரின் ஆகியோர் ஏற்கனவே எலிமினேஷனுக்கான நாமினேஷன் போட்டியில் இடம்பெற்றுள்ளனர். இந்த நிலையில், இன்று வெளியான புரோமோ வீடியோவில், உடலால் மோதி விளையாடுவதா? மனதால் மோதி விளையாடுவதா? எது அந்த கேம்? மனதால் மோதுபவர்களுக்குதான் காயம் அதிகமாக ஏற்படக்கூடும்.
இந்த வெற்றிப்பயணத்தை நோக்கிய ஒருவருக்கு கோல்டன் டிக்கெட் கிடைக்கப் போகிறது. இன்னொருவருக்கு கனவு கலையப் போகிறது என்று கமல் ஹாசன் கூறுவது போன்று வீடியோ உள்ளது. சேரனுக்கு அந்த கனவு கலையும் வாய்ப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.