புத்தாண்டு காலத்தில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் சட்டவிரோத மதுப் பாவனை தொடர்பில் சுமார் 100 பேர் வரையானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் கூறியுள்ளது.

கடந்த 13 மற்றும் 14ம் திகதிகளில் இந்த சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக 1200 அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாகவும், எனினும் பாரிய அளவில் சட்டவிரோத மதுப் பாவனை தொடர்பில் பதிவாகவில்லை என்றும் அந்த திணைக்களம் கூறியுள்ளது.