பிரபல சமூக ஊடக நிறுவனமான ஃபேஸ்புக் ஸ்ட்ரீமிங் சாதனம் ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அமேசான் நிறுவனத்தின் ஃபையர் ஸ்டிக் போன்ற ஒரு சாதனத்தை அறிமுகம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமேசான் பையர் ஸ்டிக் ஆனது ஆன்லைன் உள்ளடக்கத்திற்கான அணுகலை வழங்கும் நோக்கத்தின் கீழ், டிவியுடன் இணைக்கப்படும் ஒரு டிவைஸ் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் நிறுவனத்தின் இந்த புதிய ஸ்ட்ரீமிங் வன்பொருள் ஆனது நிறுவனத்தின் Portal Family சாதனங்களின் ஒரு பகுதியாக இருக்கும் என்றும், இதில் ஒரு கேமரா இடம்பெறும் மற்றும் TV viewing மற்றும் Augmented Reality (AR) ஆகியவைகளை இணைக்கும் வீடியோ சாட் ஆதரவு இருக்கும் என்றும் வெரைட்டி.காம் வழியாக வெளியான அறிக்கை தெரிவித்துள்ளது.