சந்திமால் தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்து அணியுடனான கிரிக்கெட் சுற்றுத்தொடருக்காக நேற்றுமுந்தினம் (டிசம்பர் 03) இரவு நியூசிலாந்து நோக்கி பயணமானது.

இரு அணிகளும் 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் ஒரு ரி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முதலாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 15 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன் இரண்டாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 26 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒரு நாள் போட்டிகள் ஜனவரி 03, 05 மற்றும் 08 ஆம் திகதிகளிலும் ஒரே ஒரு ரி20 போட்டி ஜனவரி 11 ஆம் திகதியும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்து அணியுடனான தொடரை அடுத்து இலங்கை அணி, தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய அணிகளுடன் மோதவுள்ள நிலையில் தொடர்ச்சியாக 100 நாட்கள் இலங்கை அணி வெளிநாடுகளில் தங்கியிருக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.