நேற்று வெளியான பேட்ட படம் சர்க்காரின் முதல்நாள் வசூலை முந்தவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் நேற்று வெளியான பேட்ட படம் தமிழகத்தில் பல திரை அரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

ரஜினி ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். பழைய கதையாக இருந்தாலும் இதில் ரஜினி தனக்கே உரித்தான உடல் மொழி, நகைச்சுவை, ஆக்‌ஷன் என பின்னி எடுத்திருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையில் மட்டும் முதல்நாளில் 170 ஷோக்கள் ஓடின. அனைத்து திரை அரங்குகளிலும் கிட்டத்தட்ட ஹவுஸ் புல்தான். இதில் 1 கோடி வசூலை எட்டிள்ளது பேட்ட. தமிழகம் முழுவதும் 16 கோடி வசூலை எட்டியுள்ளது.

ஆனால் இந்த வசூல் சர்க்கார் மற்றும் 2.0-வின் முதல் நாள் தமிழக வசூலை முந்தவில்லை. 2.0-வின் வசூல் கிட்டத்தட்ட 18 கோடி. சர்க்காரின் முதல்நாள் வசூல் 31 கோடி. மெர்சல்- 24 கோடி, கபாலி- 21.5 கோடி.

ஆனால் பேட்ட படம் குடும்ப ஆடியன்ஸை கவர்ந்துள்ளது. ஆகவே இன்னும் சில நாட்களில் அதிக மக்களை திரை அரங்குக்கு வர வைக்கும் எனப்படுகிறது. கர்நாடகா மாநிலத்தில் பேட்ட படத்துக்கு நல்ல துவக்கம் ஏற்பட்டுள்ளது.