உலகக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்னர் சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் மிகச்சிறப்பாக செயல்புரிந்த பேட்ஸ்மேன், பவுலர், ஆல்ரவுண்டர் என வீரர்களை தேர்வு செய்து விருது வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் ஏற்கனவே 3 சர்வதேச விருதுகளை வென்ற இந்திய கேப்டன் விராட் கோலிக்கு மீண்டும், சியட் சர்வதேச கிரிக்கெட் விருதுகள் 2019ல் சர்வதேச சிறந்த வீரர் விருது, அங்கீகரிக்கப்பட்ட வீரர் விருது என இரட்டை விருது என மொத்தம் 5 விருதுகளை கோலி பெற உள்ளார்.

வாழ்நாள் சாதனையாளர் விருது – மொஹீந்தர் அமர்நாத்

சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஆண்டின் சிறந்த பேட்ஸ்மேன் – விராட் கோலி

ஆண்டின் சிறந்த சர்வதேச பவுலர்- ஜஸ்பிரிட் பும்ரா

ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் – சதீஸ்வர் புஜாரா

ஆண்டின் சிறந்த சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வீரர் – ரோஹித் சர்மா

ஆண்டின் சிறந்த சர்வதேச டி 20 பேட்ஸ்மேன் – ஆரோன் பிஞ்ச்

ஆண்டின் மிகச்சிறந்த செயல்திறன் மிக்க வீரர் – குல்தீப் யாதவ்

மிகச்சிறந்த சர்வதேச டி 20 கிரிக்கெட் பவுலர்- ரஷித் கான்

உள்ளூர் போட்டிகளில் சிறந்த வீரர் – அஷுடோஷ் அமன்

ஆண்டின் சர்வதேச சிறந்த பெண் கிரிக்கெட் வீராங்கனை – ஸ்மிரி மந்தானா

ஆண்டின் சிறந்த இளம் கிரிக்கெட் வீரர் – யஷ்யாஷி ஜெய்ஸ்வால் (மும்பை)

ஆண்டின் சிறந்த கிரிக்கெட் பத்திரிகையாளர்கள் – ஸ்ரீராம் வீரா மற்றும் ஸ்னேஹல் பிரதான்

கிரிக்கெட்டுக்கான சிறப்பு அஞ்சலி: மறைந்த அஜித் வதேகர்