சர்வாதிகார குடும்ப ஆட்சியின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த அரச திணைக்களங்களை ஆட்சி மாற்றத்தின் ஊடாக சுயாதீன ஆணைக்குழுக்களாக ஸ்தாபித்தமையின் ஊடாகவே போதைப்பொருள் ஒழிப்பினை வெற்றிக் கொள்ளவும், பாதாள குழுக்கக்களை கட்டுப்படுத்தவும் முடிந்துள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் துஸார இதுனில் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை காரியாலயத்தில் இன்று புதன்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்.

பாதாள குழுவின் தலைவனுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் இவனை நாட்டுக்கு கொண்டுவருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் இரு நாட்டு இராஜதந்திர மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஆகவே இவ்விடயத்தில் அரசியல் வாதங்களை முன்வைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் குறித்த கைது சம்பவத்தில் உள்ளடங்கப்பட்டிருந்தால் அவர்களுக்கும் சட்டத்தின் பிரகாரம் தண்டனை வழங்கப்பட வேண்டும் எவரும் விதிவிலக்கல்ல.