சாப்பிட்டதும் எதுக்களித்தல் என்பது எல்லோருக்கும் இருக்கின்ற ஒரு வகை பிரச்சனை ஆகும். வயிற்று பகுதியில் உள்ள அமிலம் உணவுக் குழாய் வழியாக உயர்வதால் இந்த பிரச்சினை ஏற்படுகிறது.

இந்த எதுக்களிப்பு பிரச்சினையால் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சினைகளும் சேர்ந்தே வரும். வயிற்று பகுதியில் உள்ள அமிலம் உணவுக் குழாய் வால்வு வரை வருகிறது. இப்படி எதுக்களிப்பது நாம் உண்ணும் சில உணவுகளால் ஏற்படுகிறது. எனவே இந்த மாதிரியான உணவுகளை தவிர்ப்பது நல்லது.

அமில உணவுகளான ஆரஞ்சு, லெமன், ஆரஞ்சு ஜூஸ், லெமனேடு, க்ரான்பெர்ரீஸ் மற்றும் திராட்சை போன்ற உணவுகளை தவிருங்கள். இந்த மாதிரியான உணவுகள் எதுக்களித்தல் பிரச்சனையை உண்டு பண்ணுகிறது. சாலட் போன்றவற்றில் சுவையூட்ட பயன்படுத்தும் வினிகர் கூட இந்த பிரச்சனையை உண்டு பண்ணும். இதற்கு பதிலாக ஆப்பிள் சிடார் வினிகரை பயன்படுத்தலாம்.

மிளகாய் பொடி, கருப்பு மிளகு, கடுகு போன்ற கார உணவுகள் வயிற்றில் எரிச்சலை ஏற்படுத்தி எதுக்களித்தல் பிரச்சனையை உண்டு பண்ணுகிறது.

தக்காளி பயன்படுத்தும் உணவுகளான பாஸ்தா, சாஸ், தக்காளி சூப், தக்காளி ஜூஸ் போன்ற உணவுகளும் எதுக்களித்தலை ஏற்படுத்துகிறது.

கொழுப்பு உணவுகளான சாலமி, பர்கர், பீட்சா மற்றும் ஸ்டீக்ஸ் போன்ற உணவுகளை தவிர்ப்பது நல்லது. இந்த மாதிரியான உணவுகள் சீரணிப்பதை தாமதமாக்கி வயிற்றில் நீண்ட நேரம் உணவை தங்க வைப்பதால் எதுக்களித்தலை ஏற்படுத்துகிறது.

பால் பொருட்கள் சீரண என்சைம்களை அதிகமாக்குகிறது. எனவே படுப்பதற்கு முன் பால் குடிப்பதை தவிருங்கள். கொழுப்புள்ள பால், சீஸ் மற்றும் மில்க் ஷேக்கிற்கு பதிலாக கொழுப்பு குறைவான கொழுப்பில்லாத பாலை அருந்தலாம். இதன் மூலம் எதுக்களித்தலை தவிர்க்கலாம்.

நட்ஸ், க்ராக்கர்ஸ், டோஸ்ட், பாப்கார்ன் மற்றும் குக்கீஸ் போன்ற மொறு மொறுப்பான உணவுகளை தவிருங்கள். இதுவும் எதுக்களித்தல் பிரச்சனையை உண்டு பண்ணுகிறது.