பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆளும் கட்சி, எதிா்க்கட்சிகள் மாறி மாறி குற்றம் சாட்டி வரும் நிலையில் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம் பெண்கள், பள்ளி, கல்லூாி மாணவிகளை முகநூல் மூலம் தொடா்பு கொண்டு பாலியல் வன்கொடுமை செய்துவந்த கும்பல் அண்மையில் கைது செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஆளும்கட்சிக்கு தொடா்பு உள்ளதாக எதிா்க்கட்சியும், எதிா்க்கட்சி உறுப்பினா்களுக்கு தொடா்பு உள்ளதாக சட்டப்பேரவை துணைசபாநாயகா் பொள்ளாச்சி ஜெயராமனும் மாறி மாறி குற்றம் சாட்டி வந்தனா்.

இந்நிலையில் இந்த வழக்கில் தற்போது வரை 8 போ் கைது செய்யப்பட்ட நிலையில் இவா்களை தவிற வேறு யாருக்கும் தொடா்பு இல்லை. குறிப்பாக அரசியல் வாரிசுகளுக்கு 100 சதவிகிதம் தொடா்பு கிடையாது என்று கோவை மாவட்ட டிஎஸ்பி பாண்டியராஜன் தொிவித்திருந்தாா்.

இதனைத் தொடா்ந்து இந்த வழக்கு இன்று காலை சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்படுவதாக தமிழக அரசு தொிவித்தது. இதற்காக சிறப்பு பெண் அதிகாாியை நியமிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. வழக்கில் கடுமையான நடவடிக்கைக் கோாியும், குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.