மன்னார் நகர் நிருபர்-
(11-1-2019)

மன்னார்-அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலையின் 2019 ஆம் ஆண்டிற்கான இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டியின் முதல் நிகழ்வான வீதி ஓட்டப்போட்டி(மரதன்) இன்று வெள்ளிக்கிழமை காலை 7 மணியளவில் பாடசாலைக்கு முன் ஆரம்பமானது.

-பாடசாலையின் அதிபர் எம்.வை.மாஹிர் குறித்த வீதி ஓட்டப்போட்டியினை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.

பாடசாலைக்கு முன் ஆரம்பமான குறித்த போட்டி பிரதான வீதியூடாக சென்று மன்னார் வைத்தியசாலை வீதியை சென்றடைந்தது.

இதன் போது குறித்த போட்டியில் 1 ஆம் இடத்தினை தாஜ் இல்லத்தைச் சேர்ந்த எம்.எம்.எம்.முஜாகிர் மற்றும் 2 ஆம்,3 ஆம் இடங்களை சம்ஸ் இல்லத்தைச் சேர்ந்த வீரர்களாக எம்.எல்.எம்.சல்மான் பாரீஸ் மற்றும் எம்.கே.எம்.வசீம் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

-இதே வேளை 2019 ஆம் ஆண்டிற்கான இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டியின் முதல் நிகழ்வான வீதி ஓட்டப்போட்டியானது (மரதன்) இன்றைய தினம் மன்னார் சித்திவிநாயகர் இந்தக்கல்லூரி மற்றும் மன்னார் புனித சவேரியார் பெண்கள் கல்லூரி ஆகிவற்றிலும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.