தற்போதைய வானியல் கோட்பாடுகளின்படி, ‘இருக்கக்கூடாது’ என்று கருதப்படும் ஒரு பெரிய கோளை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

சூரிய குடும்பத்திலுள்ள ஜுபிடர் கோளை ஒத்த இது, தன்னை விட மிகவும் சிறிய நட்சத்திரத்தை சுற்றி வருவது, ஒரு கோள் எப்படி உருவாகிறது என்ற கோட்பாட்டிற்கு எதிராக அமைந்துள்ளதால் அது விஞ்ஞானிகளிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

பூமியிலிருந்து சுமார் 284 ட்ரில்லியன் கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ள இந்த கோள், சூரிய குடும்பத்தில் அமைந்துள்ள கோள்களின் அமைப்பை ஒத்துள்ளது.

இதுகுறித்த ஆய்வு முடிவுகள் சயின்ஸ் எனும் சஞ்சிகையில் சர்வதேச விஞ்ஞானிகள் குழுவினால் பதிப்பிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஸ்பெயினில் உள்ள தொலைநோக்கிகளை பயன்படுத்தி இந்த கோள் கண்டறியப்பட்டுள்ளது.