மன்னார் நகர் நிருபர்

07.14.2019

ஜனநாய ரீதியில் தமிழர் வாழ்வுரிமை சார்பான விடயங்களை முன்னிறுத்தி அரசியலுக்கு அப்பாற்பட்டு தமிழ் மக்களின் வாழ்வியல் நகர்வுகளை முன்னெடுக்கும் நோக்கில் சிவில் சமூக செயற்பாட்டாளர் சிவகரன் தலைமையில் தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் அங்குரார்பண நிகழ்வு இன்றுகாலை 10 மணியளவில் தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் பொது மண்டபத்தில் இடம் பெற்றது

குறித்த நிகழ்வில் வைபவரீதியாக தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கமானது சிவில் சமூக ஆர்வளர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் மத குருக்கல் மற்றும் தமிழர் வாழ்வுரிமை இயக்கத்தின் அங்கத்தவர்கள் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டதுடன்

இயக்கத்தின் செயற்பாடுகள் மற்றும் கொள்கைகள் தொடர்பாக விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டது அத்துடன் எதிர்வரும் காலங்களில் தமிழர் வாழ்வுரிமை இயக்கம் மாவட்ட பிரதேச கிராம ரீதியில் ஜனநாயக ரீதியில் மேற்கொள்ளவிருக்கும் அரசியல் சமூக கலாச்சார விழிப்புணர்வு கருத்தமர்வுகள் துண்டுப்பிரசுர விநியோகம் தொடர்பாக்வும் கலந்து பேசப்பட்டது.

தொடர்சியாக அரசியலுக்கு அப்பாற்பட்டு மக்கள் நிலம் உரிமை காணாமல் ஆக்கப்படோர் விடயம் அரசியல் கைதிகள் தொடர்பான விடயங்களில் முன்னின்று செயற்படற்படுவதுடன் மாவட்ட மற்றும் கிராம ரீதியில் நிர்வாகம் மற்றும் அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்பட்டு இயக்கத்திற்கான ஆரம்ப நடவடிக்கைகள் மற்றும் நிர்வாக தெரிவுகள் இடம் பெறவுள்ளமை குறிப்பிடதக்கது.