நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக களனி, களு மற்றும் கிங் கங்கைகளின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதனால் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பாக களனி கங்கையின் நீர் மட்டம் தெரணியகல பகுதியிலும், களு கங்கையின் நீர் மட்டம் இரத்தினபுரி பகுதியிலும், கிங் கங்கையின் நீர் மட்டம் தவலம பகுதியிலும் உயர்வடைந்து அபாய நிலையை அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் தாழ்நிலப் பகுதியில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதற்கு தயாராக இருக்குமாறும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.