கனடாவில் நடைபெற்ற சுரங்க பணியின் போது கோழி முட்டை அளவுக்கு மஞ்சள் நிற வைரக்கல் கிடைத்துள்ளது. இதை வாங்க உலகளவில் உள்ள வைர வியாபாரிகள் மத்தியில் போட்டி ஏற்பட்டுள்ளது.

கனடாவில் உள்ள சுரங்கத்தில் கிட்டத்தட்ட கோழி முட்டை அளவுக்கு வைரம் ஒன்று கிடைத்துள்ளது. ரியோ டின்டோ குழுமத்துக்கு சொந்தமான சுரங்கம் கனடாவில் உறைநிலை குளிர் நிலவும் வடக்குப் பகுதியில் செயல்படுகிறது.

அங்கு நடைபெற்ற சுரங்கப் பணிகளின் போது உடையாமல் 552 கார்ட் அளவுள்ள மஞ்சள் நிற வைரக்கல் கிடைத்துள்ளது. இது அங்கு பணியாற்றிய பலரையும் ஆச்சர்யம் அடையச் செய்துள்ளது.

இந்த நூற்றாண்டில் சுரங்க பணிகளின் போது எடுக்கப்பட்ட வைரங்களிலேயே அதிக எடை கொண்ட ஏழாவது வைரக்கல்லாக இது கணக்கிடப்பட்டுள்ளது. 1905-ல் ஆப்பிரிக்காவில் 3,106 காரட் அளவுள்ள வைரம் கிடைத்ததே மிக அதிக எடைகொண்ட வைரமாக பார்க்கப்பட்டு வருகிறது.