வான் அறிவியலுக்கென பிரத்யோகமாக தயாரிக்கப்பட்ட இந்தியாவின் செயற்கைகோளான ஆஸ்ட்ரேசாட் மற்றும் நாசாவின் சந்திரா எக்ஸ்ரே ஆய்வகம் ஆகியவற்றில் இருந்து கிடைத்த தரவுகளை பயன்படுத்தி விஞ்ஞானிகள் பைனரி ஸ்டார் சிஸ்டம் 4U 1630-47 -ல் அதிகபட்ச சாத்திய விகிதத்தில் சுழலும் கருந்துளை எனப்படும் பிளாக்ஹோலை கண்டுபிடித்துள்ளனர். ஒப்பீட்டளவில் சிறிய கருந்துளையான இவை பெரும் விண்மீன்திரள் கருக்களின் கவர்ச்சியான முடிவு நிலை என கூறுகின்றனர் மும்பை டாடா இன்ஸ்டியூட் ஆப் பன்டமெண்டல் ரிசர்ச்(TIFR) அமைப்பின் விண்வெளி ஆய்வாளர்கள்.

உருக்குலைந்த விண்மீன கருவில் ஒட்டுமொத்த நிறையும் ஒரு புள்ளியில் நெருங்கியுள்ளதால் அதன் ஈர்ப்புவிசை மிகவும் வலுவாக உள்ளதாக கூறும் இந்த ஆய்வுமுடிவுகள், வான்இயற்பியல் ஆய்வுக்கட்டுரையில் பதிப்பிக்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.கருந்துளை என்னும் பெயருக்கு ஏற்ப இந்ந புள்ளியில் எதையும் நேரிடையாக காணமுடியாது ஏனெனில் இந்த பகுதியில் இருந்து எதுவும்(ஒளி கூட) தப்பித்து செல்லமுடியாது.

ஆச்சர்யமளிக்கும் விதமாக,இந்த கருந்துளைகள் நிறை மற்றும் சுழல்வேகம் என்னும் முழுவதுமாக இரண்டே இரண்டு அம்சங்களை கொண்டே அடையாளம் காணப்படுவதால், பிரபஞ்சத்தில் எளிதில் அறியக்கூடிய பொருளாக இவை இருக்கின்றன. எனவே இந்த இரு பண்புகளின் அளவீடுகள் தனித்துவமான முக்கியத்துவம் பெற்று, பிரபஞ்சத்தின் சில அதிமுக்கிய அம்சங்கள் மற்றம் அவற்றுடன் தொடர்புடைய இயற்பியலை ஆய்வுசெய்ய உதவுகின்றன என்கின்றனர் விஞ்ஞானிகள்.

“கருந்துளையின் சுழல்வேகத்தின் அறிவியல் அளவீடுகள் மிகவும் கவர்ச்சியானதாக இருந்தாலும், பிரபஞ்சத்தின் எளிய பொருளான இது அதிகபட்ச சாத்திய மதிப்பிற்கு அருகில் உள்ளது” என்கிறார் டி.ஐ.எப்.ஆர் இணை பேராசிரியர் சுதீப் பட்டாச்சார்யா. பிரபஞ்சத்தின் சில அதிமுக்கிய அம்சங்கள் மற்றும் அடிப்படை இயற்பியல்(எ.கா புவியீர்ப்பு விசை) போன்றவற்றை ஆய்வு செய்ய இவை பொதுவாக மிக முக்கியமான ஒன்று எனக்கூறும் சுதீப், ஆஸ்ட்ரோசாட் சாப்ட் எக்ஸ்ரே டெலஸ்கோப்பின் முதன்மை ஆய்வாளராக உள்ளார். “சுழல்விகிதம் போன்ற அளவீடுகளை கணக்கிடுவது மிகவும் கடினம் மற்றும் அதிக தரம்வாய்ந்த எக்ஸ்ரே ஆய்வகத்தை பயன்படுத்தி மட்டுமே பைனர் ஸ்டெல்லார் சிஸ்டத்தின் சரியான நிலையை கண்டறியமுடியும் எனக்கூறுகிறார் யு.கே சவ்தாம்ப்டன் பல்கலைகழகத்தில் படித்து டி.ஐ.எப்.ஆரில் பணிபுரியும் மயூக் பஹாரி. கருந்துளையின் சுழல்விகிதத்தை அளவிடுவதில் இந்தியாவின் ஆஸ்ட்ரோசாட் முக்கியபங்கு வகிப்பதாகவும்,அதன் முடிவுகள் சந்திரா செயற்கைகோளின் சமகால முடிவுகளுடன் ஒத்துப்போவதாகவும் அவர் கூறுகிறார்.