சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா – ஐஸ்வர்யா மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் `தமிழ்ப்படம் 2′ படத்தின் சென்சார் ரிசல்ட்டுக்கு பாகுபலியை போஸ்டரை வைத்து வெளியிட்டிருக்கிறார்கள்.

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுடன் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் படம் `தமிழ்படம் 2′. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில், படத்தை தணிக்கை குழுவினருக்கு அனுப்பியுள்ளனர். படத்தை பார்த்த குழுவினர் ‘யூ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
பல படங்களை கலாய்த்து போஸ்டர் வெளியிட படக்குழுவினர், தற்போது சென்சார் ரிசல்ட் வெளியானதற்கு பாகுபலி படத்தில் வரும் காட்சியை பயன்படுத்தி போஸ்டர் வெளியிட்டிருக்கிறார்கள். இதையடுத்து ஜுலை 13-ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
சமீபத்தில் வெளியான படத்தில் டீசர், பாடல்கள் என அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. படத்தில் சிவா ஜோடியாக ஐஸ்வர்யா மேனன் நடித்திருக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் திஷா பாண்டே, சதீஷ், சந்தான பாரதி, மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, சேத்தன், உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.