நாசா அனுப்பிய இன்சைட் செயற்கைக் கோள் செவ்வாய் கிரகத்தில் சாய்வாக தரையில் அமர்ந்திருக்கிறது என நாசா தெரிவித்துள்ளது.

1976ஆம் ஆண்டு முதல் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா செவ்வாய் கிரகம் குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்டிருக்கிறு. பல விண்கலங்களையும் செவ்வாய்க்கு அனுப்பி ஆய்வு மேற்கொண்டிருக்கிறது.

அந்த வகையில் நாசாவின் 9வது செவ்வாய் கிரக ஆராய்ச்சி விண்கலமான இன்சைட் கடந்த நவம்பர் 27ஆம் தேதி செவ்வாய் கிரகத்தை அடைந்தது. இது செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பை ஆழமாக ஆய்வு செய்யும் நோக்கில் அனுப்பட்டது.

15 டிகிரி கோணம் வரை சாயக்கூடிய வகையில் உருவாக்கப்பட்ட இந்த விண்கலம் தற்போது செவ்வாய் கிரகத்தின் புழுதியும் மணலும் படர்ந்த ஹோலோ என்ற நிலப்பரப்பில் 4 டிகிரி சாய்வாக அமர்ந்திருக்கிறது என்று நாசா தெரிவித்துள்ளது.

இதனால் இன்சைட்டில் உள்ள நில அதிர்வு மற்றும் வெப்பநிலையை அறியும் சென்சார்கள் சரியாக வேலை செய்யும் என நம்புவதாகவும் நாசா விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.