ரஷ்யா சார்பில் தொடர்ந்து பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் கொண்ட விண்கலங்கள் சாதனை படைத்து வருகிறது என்று தான் கூறவேண்டும். இந்நிலையில் கஜகஸ்தானில் இருந்து கடந்த அக்டோபர் மாதம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு
புறப்பட்ட சோயுஸ் விண்கலத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து அந்த விண்கலத்தில் பயணித்த வீரர்கள், உடனடியாக அவசர வழியில் இருந்து தனி கேப்சூல் மூலம் கீழே  குதித்து அதில் இருந்த வீரர்கள் உயிர் தப்பினர்.

இதன்பின்னர் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி வைக்கும் திட்டம் சிறுது காலம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று ரஷ்யா சார்பில் தகவல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதனை தொடர்ந்து, சோதனை ரீதியாக மூன்று முறை ஆளில்லா விண்கலம் ஏவப்பட்டது, இந்த சோதனை முயற்சி வெற்றி கிடைத்துள்ளதை தொடர்ந்து, பைக்கானுர் விண்வெளித் தளத்தில் ரஷ்யாவின் சோயுஸ் வண்கலம் புறப்படுவதற்கான
கவுன்ட் டவுன் தொடங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த விண்கலம் ரஷ்யாவின் ஒலேக் கோனோநென்கோ,கனடாவின் டேவிட், செயின்ட் ஜாக்குஸ் அமெரிக்காவின் மெக்கிளெயின் ஆகியோர் நாளை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு புறப்பட்டு செல்லவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.